அட்லீ இயக்கத்தில் , விஜய் , நயன்தாரா நடிக்கும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மிக அதிக தொகைக்கு யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் எக்ஸ் ஜென் ஸ்டுடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து வாங்கியுள்ளது.
இந்நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரியில் தொடங்கியிருக்கிறது. இத்துடன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைகிறது. பாடல் காட்சிகளுக்காக சில வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் படக்குழு அதன் பிறகு பின்னணி வேலைகளில் ஈடுபட உள்ளனர்.
இன்று சென்னையில் தொடங்கிய ‘பிகில்’ படத்தி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சில வெளியாகி வைரலாகி வருகிறது.