சென்னை: மறைந்த விஜய்காந்தின் உடல் ராஜாஜி ஹாலில் (மாநிலத்தின் மற்ற அரசியல் தலைவர்களைப் போல) வைக்கப்பட்டு, அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் (Captain Vijayakanth) மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கேப்டன் விஜயகாந்த மறைவு செய்தி வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என குறிப்பிட்டதுடன், விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல் மாநிலத்தின் மறைந்த மற்ற அரசியல் தலைவர்களைப் போல ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு, அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் அவரது கருணை மதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்து உள்ளார்.