காஞ்சிபுரம்:

காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று பொறுப்பேற்றார்.

காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திரர் கடந்த 28ம் தேதி காஞ்சிபுரத்தில் முக்தியடைந்தார். சங்கர மடத்தில் அவரதுர் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ‘‘இளைய மடாதிபதியான விஜயேந்திரர் 70வது மடாதிபதியாக பொறுப்பேற்று கொண்டார். இளைய மடாதிபதி தேர்வு தற்போது இல்லை’’ என சங்கர மட மேலாளர் சுந்தரேஸ்வர ஐயர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா தண்டலம் கிராமத்தில் 1969 மார்ச் 13ம் தேதி பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் சங்கரநாராயணன். சிறு வயது முதலே திருவண்ணாமலை போளூரில் அவரது தந்தை முக்குள்ள கிருஷ்ணமூர்த்தியின் பாடசாலையில் வேதம் படித்தார்.

11வது வயதில் மகா பெரியவரை மகாராஷ்ராவில் சந்தித்து ஆசி பெற்றார். 1983 மே 29ம் தேதி காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சந்நியாசம் வழங்கப்பட்டது. அப்போது ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என அழைக்கப்பட்டு வருகிறார்.