விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார்! பிரேமலதா

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமோட இருக்கிறார் என்று அவரது மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.

வருடாந்திர உடல் பரிசோதனை செய்ய விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக அறிவித்தது.

கடந்த 23ந்தேதி உடல்நல பரிசோதனை என்று அனுமதிக்கப் பட்ட விஜயகாந்த், ஒரு வார காலமாகியும் இன்னும் பரிசோதனை முடிந்து வீடு திரும்பவில்லை.

இதன் காரணமாக, விஜயகாந்த் குறித்து பல்வேறு சர்ச்சைக்கிடமான  கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

இந்நிலையில், மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நலமுடன் இருப்பதாகவும், அநேகமாக ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்திற்கு வருவார் என்றும் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக மகளிர் அணி செயலாளருமான   பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.


English Summary
Vijayakanth will campaign in R.K.Nagar by-election! Premalatha vijayakanth