சகாப்தம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவக அறிமுகமானவர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன்.

சண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தக்வல் வெளியாகி உள்ளது. சண்முக பாண்டியன் நடிக்கும் மூன்றாவது படமான இப்படத்தை இயக்குனர் பூபாலன் இயக்குகிறார்.

’ஜி எண்டர்டெயினர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த ரோனிகா சிங் நடிக்கிறார். . இவர்களுடன் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் இப்படத்தில் அர்ச்சனா, முனீஸ்காந்த், அழகம் பெருமாள், பவன், சாய்தீனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு அருண் ராஜ் இசை அமைக்கிறார். கார்க்கி பாடல்களை எழுதுகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

[youtube-feed feed=1]