சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலம் தேறி வீடு திரும்பினார் என மியாட் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ஏற்கனவே டிசம்பர் 7ந்தேதி  இரவு  விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அவர்  இன்று (டிசம்பர் 11ந்தேதி) வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை தெரிவித்து உள்ளத.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த  சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது மருத்துவ  பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில்தான்,  கடந்த நவம்பர்  18ம் தேதி விஜயகாந்துக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து,சென்னையில் உள்ள  மியாட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், இதனை பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்து வீடியோ வெளியிட்டிடிருந்தார்.  மேலும், விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்களும் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல் நலம் தேறியுள்ள நிலையில் மருத்துவமனையில் இன்று வீடு திரும்பினார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த 7ந்தேதி இரவு விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் இன்றுதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மியாட் மருத்துவமனை  இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.