சென்னை: த வெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த விஜய் கரூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து,  கரூர் செல்லும் விஜய் – நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு  அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட சிலரை கைது செய்ய காவல்துறை தேடி வருகிறது. அவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில்,  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த  உயிரிழந்தவர்கள் மற்றும்  பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணம் வழங்க விஜய் திட்டமிட்டு உள்ளார்.  அவர் இதுவரை கரூர் செல்லாமல் இருப்பது விவாதப்பொருளாக மாறி உள்ள நிலையில், விஜய் கரூர் செல்ல  நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கரூர் செல்ல வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும்  விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.