ஒருபுறம் தளபதி விஜய் ரசிகர்களும், மறுபுறம் தியேட்டர் உரிமையாளர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பேரழிவிற்குள்ளான தொழில்துறையில் உற்சாகத்தைத் தருவதற்காக ஒரே எதிர்ப்பார்ப்பாக தற்போதைக்கு உள்ளது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் மட்டுமே.
இதற்கிடையில், விஜய்க்காக இப்படத்தி ன் சிறப்பு ஷோவை ஏற்பாடு செய்து திரையிட்டார்கள். படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தார் விஜய். ‘மாஸ்டர்’ படத்தை பார்த்துமுடித்த பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜை விஜய் பாராட்டியது மட்டுமல்லாமல், எதிர் காலத்தில் மீண்டும் இணைந்து பணி யாற்றுவதற்கான விருப்பமும் வெளிப் படுத்தப்படுத்தினாராம்.
விஜய், லோகேஷ் கனகராஜ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஆகியோ ரின் அதே அணி மீண்டும் புதிய படத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ போன்ற ‘மாஸ்டர்’ படமும் நேரடியாக OTT தளத்துக்கு செல்லக்கூடும் என்று வதந்திகள் அடிக்கடி வருகின்றன. மாஸ்டர் படத்து ஒன்றிரண்டு ஒடிடி தளங்கள் கைகளில் கோடிகளை வைத்துக்கொண்டு பேரம் பேசிக்கொண்டி ருந்தாலும், விஜயும் தயாரிப்பாளரும் இதை எல்லாம் கருத்தில் கொள்ள வில்லை. ரசிகர்களுக்கு படத்தை பெரிய திரையில் திரையிடவேண்டுமென்றே விருப்பு கிறார்களாம்.