விஜய்யும் நடிகர் ராதாரவியும் சந்தித்து கொண்ட புகைப்படம் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. இது விஜய் நடிக்கும் 62வது படம் என்பதால், “விஜய் 62” என்றே தற்போது குறிப்பிடப்பட்டு வருகிறது.

திரை உலகமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் விஜய்யின் இந்தப் படம் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தி வருவதாக புகார் எழுந்தது. அதற்கான விளக்கத்தை இதுவரை படக்குழு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் “விஜய் 62” படப்பிடிப்பின் போது நடிகர் ராதாரவி, விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து இந்தப் படத்தில் நடிகர் ராதாரவியும் நடிக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  கூடவே திரைத்துறை வேலை நிறுத்தத்தை மீறி தொடர்ந்து விஜய்யின் படப்பிடிப்பு நடந்து கொண்டுதான் உள்ளதா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகிறார்கள்.