சென்னை

கில இந்திய முஸ்லிம்  ஜமாத் நடிகர் விஜய்யை முஸ்லிம்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

நேற்று அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரும், தாருல் இப்தாவின் தலைமை முப்தியுமான மவுலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பத்வா எனும் நோட்டீசை வெளியிட்டு இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்,,

 “விஜய் முஸ்லிம் விரோதி..

அவரது பின்னணி மற்றும் கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரான பல நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன. மது அருந்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் மற்றும் சமூக விரோத சக்திகளை இப்தார் விருந்துக்கு அழைப்பது அனுமதிக்க முடியாதது மற்றும் பாவம் என்று இஸ்லாமிய சட்ட விதிகள் கூறுகிறது.

தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அத்தகைய நபர்களை நம்ப வேண்டாம்.  அவர்களை நிகழ்வுகளுக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். திரைப்படத் துறையில் ஒரு தொழிலுக்குப் பிறகு அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் முஸ்லிம் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்”

என்று ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி கூறி உள்ளார்.