அட்லி- விஜய் மூன்றாவது முறையாக இணைந்து பணி புரிந்து வரும் படம் பிகில். வருகின்ற தீபாவளிக்கு இப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படத்தையும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
பிகில் படத்தில் இரண்டு வேடங்களில் நடிகர் விஜய் நடித்திருப்பது போல, சங்கத் தமிழன் படத்திலும் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியாகிய நிலையில், அதேபாணியில் விஜய் – விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.