குழந்தைகளை சீரழிக்கும் விஜய் டிவி! கோட் கோபி இதை விவாதிப்பாரா?

Must read

 

எஸ். கோதண்டராமன் அவர்கள் நமக்கு அனுப்பியுள்ள கடிதம்:

ன்று சேனல் மாற்றும்போது, விஜய் டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்ததைக் கண்டேன். (காமெடி ஜூனியர் ) சற்று நேரம் பார்த்தேன்.

நிகழ்ச்சி நடத்துனர் கேட்ட சில கேள்விகளும், அதற்கு குழந்தைகள் அளித்த பதில்களும்:

“முதல் மாதம் ஜனவரி.. ரெண்டாம் மாதம் பிப்ரவரி.. பத்தாவது மாதம்..?

“டெலிவரி..!”

“கணக்கு பண்ணுவியா, மேக்ஸ் போடுவியா..?”

”கணக்கும் பண்ணுவேன்.. மேக்ஸூம் போடுவேன்..”

“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா..?”

”உங்க பொண்டாட்டி உங்களை சந்தேகப்படுவாங்க!”

இப்படி பதில் சொன்ன அனைவருமே ஐந்து ஆறு வயது குழந்தைகள். நிச்சயமாக அவர்களாக இது போன்ற பதில்களைச் சொல்லப்போவதில்லை. நிகழ்ச்சி நடத்துனர்கள் அப்படி இந்தக் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள். குழந்தைகள் மனதில் இப்படி நஞ்சை விதைக்கலாமா? இது குழந்தைகள் வன்முறையில் சேராதா…?

இன்னொரு கொடுமை.. இந்தக் கூத்துக்களைப் பார்த்து ரசித்து கைதட்டி சிரிக்கிறார்கள் பெற்றவர்கள். என்ன மானெங்கெட்ட மனிதர்களோ!

விவரங்கெட்ட விஜய் டிவி! வெட்கங்கெட்ட பெற்றோர்கள்!

இன்னொரு விசயம்.. அதே விஜய் டிவி “நீயா, நானா” நிகழ்ச்சியில் ஊர் நியாயமெல்லாம் பேசும் கோட் கோபி, இந்த கொடுமை பற்றி விவாதிப்பாரா?

More articles

Latest article