சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில், அவரது பயத்திற்கு காவல்துறை 11 நிபந்தனைகளை விதித்துள்ளது.

தவெக தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தின் ஒருபகுதியாக இன்றைய தினம் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார்.  இதையொட்டி காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏற்கனவே விஜய் வாகனத்தின்மீது ஏறி குறிப்பிட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் பேசக்கூடாது என வாய்ப்பூட்டு போட்டுள்ள திமுக அரசின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  காவல்துறையின் அடக்குமுறையையும் தாண்டி அவரது மக்கள் பயணம் சந்திப்புக்கு பல ஆயிரம் தொண்டர்கள் கூறி வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் தமிழக மக்களிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளும் சனிக்கிழமை சுற்றுப்பயணம் பெரிதும் பேசுபொருளாகி வருகிறது.

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில் திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்ட மக்களை சந்தித்தார். இதையடுத்து செப்டம்பர் 20ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்றார்.

இதைத்தொடர்த்நது,  இன்று (செப்டம்பர் 27, 2025) தவெக தலைவர் விஜய் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வழக்கம் போல இந்த பிரச்சாரத்திற்கு போலீசார் கெடுபிடிகளை விதித்துள்ளனர். விஜய் வருகையின் போது தொண்டர்கள் மற்றும் மக்கள் திரள் அதிகமாக இருப்பதால் சரியான இடத்தை தேர்வு செய்வதும், போலீசார் பாதுகாப்பு அளிப்பதும் சவாலாக இருந்து வருகிறது. கரூரிலும் அப்படியான நிலைமையை சந்திக்க நேர்ந்தது. தற்போதைய நிலவரப்படி கரூர் – ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாரத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே சென்னையில் இருந்து நாமக்கல் புறப்பட்டுவிட்ட விஜய், காலை 9 மணி அளவில்  நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் அருகே உள்ள பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்

. இதையடுத்து கரூரில் நண்பகல் 12 மணியளவில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்டத்தில், திமுக முப்பெரும் விழாவுக்கு சவால் விடும் வகையில் கூட்டத்தை கூட்ட முனைப்பு காட்டி வரும் தவெகவினர், இந்த கூட்டத்தில்,. முக்கிய பிரச்சினையாக 10ரூபாய் பாலாஜி என அழைக்கப்படும் செந்தில் பாலாஜி குறித்து கடுமையாக விமர்சிக்க இருப்பதாகவும், சமீபத்தில் நடந்த கிட்னி திருட்டு, இதில் சம்பந்தப்பட்ட இரு மருத்துவமனைகளும் திமுகவினருக்கு சொந்தமானது என்பது குறித்து பற்றி விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக தவெகவினர் சமுக வலைதளங்களில், ல் கரூரில் 10 ரூபாய் மாஃபியா, நாமக்கல்லில் கிட்னி திருட்டு ஆகியவிஷயங்களை விஜய் பேச வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  த.வெ.க.வுக்கு காவல்துறையினர்  11 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.

நிகழச்சி நடத்தும் இடத்தில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் பிளக்ஸ், பேனர் வைக்கக்கூடாது, அதன்மீது தொண்டர்கள் ஏற கூடாது.

நிகழ்ச்சி நடைபெறும்போது தவெக தொண்டர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பாத வண்ணம் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும்.

முதலுதவி சிகிச்சைக்கான முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்.

கூட்டத்தை முறையாக நடத்த தீயணைப்பு துறையினர் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக மாநகராட்சியிடமும் அனுமதி பெற வேண்டும்.

திருக்காம்புலியூர் ரவுண்டானா தேசிய நெடுஞ்சாலை என்பதால் ரோடு ரேஷ நடத்த தடை, கூட்டம் முடிந்ததும் கொடி, பேனரை அற்ற வேண்டும்.

பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.