
விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகிய படம் சூப்பர் டீலக்ஸ்.
கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்ததிற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.
தேசிய விருது பெற்றவுடன் நேராக இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.
[youtube-feed feed=1]Thank you Director #ThiagarajanKumararaja ❤️ pic.twitter.com/PJ0U9AiVBw
— VijaySethupathi (@VijaySethuOffl) October 31, 2021