மீண்டும் இந்திப்படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…

Must read

 

கதாநாயகனாக நடித்தாலும், வில்லன் வேடங்களில் நடிக்க தயங்காதவர், விஜய் சேதுபதி.

ஹீரோவாக பல ஹிட் படங்களை கொடுத்த நிலையில் ரஜினிகாந்துக்கு வில்லனாக ‘பேட்ட’ படத்தில் நடித்தார்.

இப்போது ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்தியில் ‘மும்பைக்காரன்’ என்ற படத்தின் மூலம் விஜய் சேதுபதி அறிமுகமானார்.

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தின் ரீ-மேக்கான இந்த படத்தை சந்தோஷ் சிவன் டைரக்டு செய்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

‘அந்தாதூன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்த படத்தில் கத்ரினா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார், மற்ற நடிகர்-நடிகைகள் முடிவாகவில்லை.

– பா. பாரதி

More articles

Latest article