சென்ன: சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள பனையூரில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம், இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் கலந்துகொள்ளாத நிலையில், ஏராளமான மகளிர் அணியினர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைளை விஜய் எடுத்து வருகிறார். ஏற்கனவே நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்று வெற்றி பெற்று கவுன்சிலர்களாக பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில், சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ரசிகர்கள் சந்திப்பு கூட்டம், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டது. அதன்பின்னர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் அணி, ஐ.டி. அணி என தனித்தனியாக ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், நடிகர் விஜய் தனத மக்கள் இயக்கத்தின் மகளிர் அணியை வலுப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மகளிர் அணி நிர்வாகிகள் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள மக்கள் இயக்க தலைமை அலுவகலத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்றுள்ளனர். பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை. அவர், தளபதி 68 படத்திற்கான முன் தயாரிப்பு பணிக்காக படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் விஜயை பார்க்கலாம் என ஏராளமானோர் வந்த நிலையில், அவர் இல்லாதது மகளிர் அணியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடங்கியது. மகளிர் அணியினரிடையே பேசிய மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் , “இங்கு வந்திருக்கும் மகளிர் அணியைச் சேர்ந்த அனைவருக்கும் தளபதி விஜய் சார்பாக உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
விஜய் பயிலகத்தில் அதிகளவில் பெண்களே பணியாற்றுகின்றனர். மக்களிடம் விஜய் மக்கள் இயக்கத்தை மதிப்பை அதிகரிக்க மகளிரணி செயல்பாடு முக்கியம். வரும் நாட்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை மகளிரணி தீவிரபடுத்த வேண்டும். அதுமட்டுமின்றி இயக்கத்தை வளர்ச்சிக்காக நீங்கள் ஒவ்வொருவரும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்” என்று கூறினார்.
மேலும், ‘ விஜய் மக்கள் இயக்கம் ‘அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லும் பொழுது என்ன மாதிரியான அணுகுமுறைகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. மகளிர் அணி நிர்வாகிகள் எவ்வாறு மக்கள் இயக்கத்தில் பணி செய்ய வேண்டும் என்பது குறித்தும், அறிவுரை வழங்கப்படுள்ளது. இதுதொடர்பாக மக்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து மகளிர் அணி நிர்வாகிகளுக்கு, பயிற்சியும் வழங்கப்பட உள்ளது மகளிர் அணி கூட்டத்தைத் தொடர்ந்து விரைவில் தொண்டரணி, உள்ளிட்ட பிற அணி நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட உள்ளது.
இதையடுத்து, மக்களிடம் விஜய் மக்கள் இயக்கத்தை மதிப்பை அதிகரிக்க மகளிரணி செயல்பாடு முக்கியம். வரும் நாட்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை மகளிரணி தீவிரபடுத்த வேண்டும், மாவட்ட வாரியாக நிர்வாகிகள் முழுமையாக நியமிக்கப்பட்ட பிறகு, தொகுதி வாரியாக மகளிர் அணி நிர்வாகிகளை விரைந்து நியமிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
n