சென்னை: 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. அதற்கான  தேதி மற்றும் விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களின் தேர்வு அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியிட்டது. அதில் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 3வது வாரத்தில் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களின் தேர்வு அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது.

 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ம் முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும், 9, 10ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெற உள்ளது.

 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு செப்டம்பர் 15 முதல் 27ம் தேதி வரை நடைபெறும்.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும்,

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

மேலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்டம்பர் 22ம் தேதி நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.