சென்னை: தாம்பரத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் படம் பார்க்க வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 100 பேருக்கு, தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி விஜய் ரசிகர் மன்றத்தினர் கொண்டாடினர்.

நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட் படம் இன்று நாடு முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் உடன் ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் இன்று  இன்று வெளியாகியுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தில் இன்று பீஸ்ட் வெளியாகும் தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையின் பல தியேட்டர்களில் இன்று காலை 4மணி முதல் சிறப்பு காட்சிகள் காண்பிக்கப்பட்டு வருகிறது. பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாவதையொட்டி அவரது ரசிகர்கள் நேற்று முதலே தியேட்டர் களில் கட்அவுட் பேனர் என வைத்து அதகளப்படுத்தி வந்தனர்.

சென்னையில் ரோகிணி, வெற்றி, காசி என பல தியேட்டர்களில் அதிகாலை  ஷோவே களைக்கட்டியது. சென்னை குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் பீஸ்ட் பட முதல் காட்சியை அதன் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நாயகி பூஜா ஹெக்டே ஆகியோர் படக் குழுவினருடன் இணைந்து பார்த்தனர். இது தொடர்பான காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

இதற்கிடையில் தாம்பரத்தில் பீஸ்ட் படத்தை காண இருச்சக்கர வாகனங்களில் வந்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்கள் தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி அசத்தினர். சுமார் 100 ரசிர்களுக்கு விஜய் மக்கள் மன்றத்தினர் ஒரு லிட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்த பெட்ரோலை இலவசமாக வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]