சென்னை: மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருவதுடன் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மனோஜ் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு அஞ்சலி செலுத்தினார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், வி.கே.சசிகலா, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சிவக்குமார், பிரபு, சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், விஜய்யும் பாரதிராஜாவின் இல்லத்துக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.