சென்னை:
விஜய் நடிப்பில் வெளியாகிய தமிழ் படம் ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஜப்பானில் திரையிட பட உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து திரைக்கு வரும் இந்த படம் குறித்து ஜப்பான் நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
மாஸ்டர் டீச்சர் இஸ் கம்மிங் என்ற பெயரில் இந்த படம் ஜப்பானில் வெளியாக உள்ளது.
ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படம் ஜப்பான் நாட்டில் பிரிசனர் டில்லி என்ற பெயரில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]