விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த படம் கொரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது .
ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு போய்விடுமோ என்று பேச்சு கிளம்பியது.
விநியோகஸ்தர் தரப்புக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ‘மாஸ்டர்’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவரிடமும் லலித் பேசி சமாதானம் செய்துள்ளார்.
மேலும் டிஜிட்டல் நிறுவனம் எவ்வளவு கொடுக்க முன்வந்தது போன்ற தகவலை அப்டேட் செய்யும் போதுதான், ‘என் படம் ரசிகர்கள் ரசிப்பதற்கே. எவ்வளவு மாதம் ஆனாலும் காத்திருக்கலாம்’ என்று விஜய் தெரிவித்துள்ளார்.
‘மாஸ்டர்’ வெளியீடு தாமதமாவதால் கட்டப்படும் வட்டி உள்ளிட்டவையும் விஜய் தெரிந்து வைத்துள்ளார். இதனால் விஜய்யின் கால்ஷீட் லலித்துக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

[youtube-feed feed=1]