கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். 50 சதவீத இருக்கை அமல்படுத்தப்பட்டதால், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐ.எம்.டி.பி-யின் 2021-ம் ஆண்டு பிரபல இந்தியப் படங்களின் வரிசையில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அடுத்தடுத்த இடங்கள் முறையே, 2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்), 3. தி வைட் டைகர், 4. திரிஷ்யம் 2, 5. நவம்பர் ஸ்டோரி, 6. கர்ணன், 7. வக்கீல் ஸாப், 8. மஹாராணி (வெப் சீரிஸ்), 9. கிராக், 10. தி கிரேட் இண்டியன் கிச்சன் ஆகியவைகள் பெற்றிருக்கின்றன.