லண்டன்
இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் சுகாதாரமற்றவை என லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் கூறி உள்ளார்.
இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழில் அதிபர்களில் ஒருவரான விஜய் மல்லையா சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பித் தராமல் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார். மத்திய அரசு அவரை அங்கிருந்து கொண்டு வர வழக்கு தொடர்ந்துள்ளது. விசாரணையின் இந்திய போது அரசு சார்பில் விஜய் மல்லையா இந்தியாவில் மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அதில் விஜய் மல்லையாவுக்காக வாதாடும் வழக்கறிஞர் கிளாரே மாண்ட்கோமெரி தனது வாதத்தில் ஸ்காட்லாந்து சிறை அதிகாரி ஆலம் மிட்சலின் அறிக்கையை குறிப்பிட்டார்.
ஆலம் மிட்சல் தனது அறிக்கையில், “இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் மிகவும் மோசமானவை. நான் கொல்கத்தாவில் உள்ள அலிபூர் சிறை, சென்னையில் உள்ள புழல் சிறை ஆகிய பல சிறைகளை ஆய்வு செய்துள்ளேன். இந்த சிறையிலும் சுத்தம் சுகாதாரம் கிடையாது. கைதிகள் கூட்டம் கூட்டமாக வசிக்கிறார்கள். திறந்த வெளிக் கழிப்பறைகளும் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளதுமக இந்திய சிறைச்சாலைகள் காணப்படுகின்றன: என குறிப்பிட்டிருந்தார்.
அதைச் சுட்டிக்காட்டிய கிளாரே இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது என வாதிட்டார். நீதிபதி அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 10 ஆம் தேதி ஒத்தி வைத்தார்.