வரும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி என தகவல்

Must read

சென்னை: 
ரும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 என 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண விஜய் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிகிறது. மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் தனது படத்தைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தவும் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

More articles

Latest article