விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் முதன்முதலாக, ‘துப்பாக்கி’ படத்தில் இணைந்தார்கள். பின் ‘கத்தி’ ‘சர்கார்’ என மூன்று வெற்றிப்படங்களை கொடுத்தனர் .
இந்நிலையில் அடுத்து ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது. இது, ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகம் என்று பேசப்படுகிறது.
சன் பிச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் வருகிற 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை குறி வைத்து உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
சற்றும் எதிர்பார்க்காத தளபதி 65 அப்டேட் ரசிகர்களுக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.