சென்னை: தவெக தலைவர் விஜய் முதல்ல நடிகை திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்/

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபறக்கிறது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 4முனை போட்டி நிலவுகிறது. அதிமுக பாஜக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என நான்குமுனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகரும், தவெக தலைவருமான விஜய். திமுக-வை அரசியல் எதிரி என்றும், பாஜக-வை கொள்கை எதிரி என்றும் விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாவம் அவரு அனுபவமே இல்லாதவரு. அதனால் ஏதோதோ பேசுகிறார்.அவர் முதல்ல வீட்டை விட்டு வெளிய வரனும் என்றவர் , திரிஷா வீட்டுல இருந்து வெளிய வரனும். வந்தாதான் முதல்ல எல்லாமே நடக்க முடியும். குடும்பத்தோடு நல்ல உறவு வைக்கனும் என்று கூறியவர், நல்ல தலைவர்கள் வழிநடத்துன இயக்கத்தை நல்ல முறையில் சொல்லனும்.
நான் சொல்றேன் களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவன், கூரை ஏறி கோழிப்பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? இதுதான் விஜய்க்கு பதில். அவரைப் பத்தி எல்லாம் பேசல. அவரு ஆளே கிடையாது எனக்கு.
கூட்டம் இருந்தால் என்ன? ஓட்டு வேண்டாமா? விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா? ஓட்டு வேண்டாமா? நானும் ஆஞ்சநேயர் மாதிரி மலையைத் தாண்டுவேன் என்று சொல்லலாம். நம்பிக்கைதான். முடியுமா? விஜய் ஒரு சீட்டுகூட ஜெயிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
[youtube-feed feed=1]