
‘மெர்சல்’ படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து, படக்குழுவினருக்கு பெரும் விருந்து அளத்து உற்சாகமாக கொண்டாடினார் நடிகர் விஜய்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று ‘மெர்சல்’ படம் வெளியானது. படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பது உட்பட சில சிக்கல்கள் ஏற்பட்டன. பிறகு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு படம் வெளியானது.
ஆனால் படத்தல் சில காட்சிகள், மத்திய பாஜக அரசை விமர்சிப்பதாக இருக்கிறது என்று அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரசிகர்களில் பெரும் ஆதரவோடு மெர்சல் படம் பெரும் வெற்றி பெற்றது.
“உலகம் முழுதும் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகியிருக்கிறது” என்று தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதையடுத்து படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இரவு விருந்து அளித்து உற்சாகமாக கொண்டாடினார் நடிகர் விஜய்.
இதில் படக்குழுவினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
அடுத்த்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜ. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் துவங்கும் என்று கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]