லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்துள்ளது.

தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. கமல் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்துக்குப் பின் விஜய் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதனைத் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்போது ‘தளபதி 66’ படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருவேளை ‘விக்ரம்’ தாமதமானால் ‘தளபதி 66’ படத்தை விட்டுவிட்டு ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார். இருவரும் இணைவது மட்டும் உறுதியாகிவிட்டது.