விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் வழக்கம் போல திமுகவும், அதிமுகவும் முதல் இரு இடங்களை பிடித்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் தனது படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்ற விஜய்யின் கட்டளையை மீறாத மக்கள் இயக்கத்தினர், வீடு வீடாக சென்று தங்களுக்கு ஆதரவு கேட்டனர்.
இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.
அந்த சந்திப்பின் போது நடிகர் விஜய் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவர்களிடம், “இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று விஜய் கூறியுள்ளார்.