பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கியது. கடத்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 – 11 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 9.30 – 10.30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.
1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)
நமீதா மாரிமுத்து, நாடியா, அபிஷேக் வெளியேற்றப்பட்ட்டுள்ளதால் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் சின்னப்பொண்ணு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனிடையே தீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோட் தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீடு களைகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் பல்வேறு ஜாலியான டாஸ்க்குகளும் கொடுப்பார்கள் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.