பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார்.

‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.

‘தளபதி 66’ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.