This legend has left us !
A wonderful writer , fantastic director , unique actor , orator touched families with his connectable sentiments & witty dialogues! His films make sense even today ! Heartfelt Condolences to #visu sir’s family & friends! #RIPVisu sir #Legend #Genius pic.twitter.com/aMaZWE5CX3— VigneshShivan (@VigneshShivN) March 22, 2020
கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விசு கடந்த சில காலமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
விசு மறைவு தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில்:-
தன்னுடைய சென்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை வசனங்கள் மூலமாக குடும்பங்களைத் தொட்டவர் இன்றும் இவருடைய படங்கள் பேசும். விசு சாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவரின் ‘அரட்டை அரங்கம்’, ‘தில்லு முல்லு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிதம்பர ரகசியம்’, ‘பெண்மணி அவள் கண்மணி’, ‘திருமதி ஒரு வெகுமதி’, ‘வரவு நல்ல உறவு’, ‘மணல் கயிறு’ உள்ளிட்ட பல முக்கிய படங்கள் என்றென்றும் வாழும். உங்களை மறக்க முடியாது சார்” என பதிவிட்டுள்ளார் .