சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில், 127 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில், 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.6.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ, பத்திரப்பதிவு, சுங்கக்சாவடி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மின்வாரிய அலுவலகங்கள், நகரதிட்டமிடல் அலுவலகங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் போன்ற அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவ்வப்போது தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் 15ந்தேதி வரையிலான சுமார் இரண்டரை மாதங்களில், தமிழகம் முழுவதும் 27 இடங்களில்லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகளின்போது, ரூ.6 கோடியே 96 லட்சத்து 29 ஆயிரத்து 605 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 7.232 கிலோ தங்கம்,10.52 காரட் வைரம், 9.843 கிலோவெள்ளி, ரூ.37 லட்சம் நிரந்தரவைப்புத் தொகை ஆவணங்கள்போன்றவை கைப்பற்றப்பட் டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது.
அதிகபட்சமாக வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி பன்னீர்செல்வத்தின் வீட்டில் இருந்து ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப்பணம், 450 பவுன் நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதைத்தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டைசுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் இருந்து ரூ.1.37 கோடி ரொக்கப்பணம், , 3 கிலோ 81 கிராம் தங்க நகைகள், 10.52 காரட் வைர நகைகள், , 3.343 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.37 லட்சம் மதிப்புள்ள பிக்சட் டெபாசிட் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட் டுள்ளன.
சேலம் மாவட்ட பதிவாளர் துறை டிஐஜி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து, கணக்கில் வராத சுமார் ரூ.1 கோடி அளவிலான பணம் முடக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் நகர திட்டமிடல் இயக்குநர் அலுவலகத்தில் ரூ.5.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர் பெருமாளிடம் இருந்து ரூ.4.10 லட்சம்,
தேனி மாவட்ட சார் பதிவாளர் பாலமுருகனிடம் இருந்து ரூ.4.09 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஊரப்பாக்கம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரிடம் இருந்து ரூ.62 லட்சம்,
தமிழகம் முழுவதும் மொத்தம் 127 இடங்களில் நடத்தப்பட்டசோதனை நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என லஞ்சஒழிப்பு போலீஸார் தெரிவித் துள்ளனர்.