சேலம்: மாநகராட்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இது மாநகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலராக வேலை செய்து வருபவர் பார்த்திபன் . இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு ணியாற்றி வருகிறார். அவர்மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. பார்த்திபன் ஏற்கனவே மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய போது, 2017- 2018ஆம் ஆண்டு வரை மருந்துகள் வாங்குவதில் பார்த்திபன் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் மதுரை லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, அவரது வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சேலம் நகர் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த , லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திடீர் சோதனை மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.