கொழும்பு: இலங்கையில்  குழந்தைகள், முதியவர்கள் என 317 இலங்கை அகதிகளுடன் கனடாவுக்கு சென்ற படகு நடுக்கடலில் பழுதாகி நின்றது. அவர்களை வியட்நாம் கடற்படையினர் காப்பற்றி தங்களது நாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கையில் ஏராளமானோர் அகதிகளாக தமிழ்நாடு உள்பட பல நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில்,  குழந்தைகள், முதியவர்கள் என 317 இலங்கை அகதிகளுடன் படகு ஒன்று வந்துள்ளது.  இந்த படகு நடுக்கடலில் வந்துகொண்டிருந்தபோது, பழுதாகி நின்றது. இலங்கையில் இருந்து, அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல், தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடற்பனுகுதியில் பழுதானது. இதனால் செய்வதறியாது திகைத்த படக்கு ஓட்டுனர்,  கடலில் குதித்து தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து அதில் இருந்த அகதிகள்,  உதவிக்கோரி இலங்கை அரசுக்கு தகவல் அனுப்பினர்.

இதையடுத்து, இலங்கை அரசு, அவர்களை காப்பாற்றுமாறு, சிங்கப்பூர் அரசுக்கு தகவல் கொடுத்தது. இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று உடனடியாக களத்தில் இறங்கியது  சிங்கப்பூர்  கடற்படை படகில் தத்தளித்தவர்களை காப்பாற்றி வியட்நாமில் பாதுகாப்பாக கரை சேர்த்திருக்கிறது.

 இது தொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள பாமக தலைவர் ராமதாஸ், கனடாவில் தஞ்சம் அடைய 306 ஈழத்தமிழ் அகதிகள் பயணித்த கப்பல் பிலிப்பைன்ஸ் அருகில் புயலில் சிக்கித் தவித்த நிலையில், அவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைத்திருப்பது நிம்மதியளிக்கிறது. சிங்கப்பூர் அரசின் இந்த உதவி பாராட்டத்தக்கது. முதலில் போராலும், பின்னர் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாமல், பிற நாடுகளில் தஞ்சமடைய தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு அகதிகள் தகுதியும், கண்ணியமான வாழ்வுரிமையும் மறுக்கப்படுகிறது. அதனால் கனடா, இங்கிலாந்துக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் தேடி பாதுகாப்பற்ற முறையில் கப்பல் பயணம் மேற்கொள்ளும் ஈழத்தமிழ் அகதிகள் பல தருணங்களில் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்;இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். Also Read – கோவை கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர் கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தரவும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கவும் ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.