வித்யா பாலன் நடிப்பில் உருவான ‘ஷெர்னி’ திரைப்படம் ஜூன் மாதம் (ஜூன் 18) அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம்தான் இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்யா பாலன் பகிர்ந்திருந்தார்.
அதற்குள் வெளியீடு குறித்து அமேசான் ப்ரைம் வீடியோ ட்விட்டர் பக்கத்தில், “இவள் தன் தடத்தைப் பதிக்கத் தயாராக இருக்கிறாள். ஷெர்னியை ஜூன் மாதம் ப்ரைமில் சந்தியுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதனுடன் படத்தின் போஸ்டரும் பகிரப்பட்டது. இந்த போஸ்டரில் வனத்துக்கு நடுவில், துப்பாக்கியின் குறியில் வித்யா பாலன் சிக்கியிருப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது .
18ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த டிரைலரும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.