நாதன்கோட்:

‘‘ஜோம்பி கோ பூம்’’ என்ற வன்முறை, ஆக்ரோஷ சண்டை காட்சிகள் நிறைந்த வீடியோ கேம் மிகவும் பிரபலம். இதில் தீய சக்திகளை கொலை செய்ய சிறிய கூர்மையான ஆயுதம் பயன்படுத்தப்படும். வீடியோ கேமில் பயன்படுத்தப்படும் இந்த முறை மூலம் கேரளா மாநிலம் நாதன்கோட்டில் தனது குடும்பத்தை சேர் ந்த 4 பேரை கொலை செய்துள்ளார் வீடியோ கேம் பிரியர்.

வசதியான குடும்பத்தை சேர்ந்த 29 வயதான அந்த வாலிபரின் பெயர் கேடல் ஜீன்சன் ராஜா. இவர் வீடியோ கேம் பிரியர். தினமும் தனது அறையில் பல மணி நேரத்தை வீடியோ கேம் விளையாடுவதற்காக செலவிட கூடியவர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘இந்த கொலைகளை செய்ய வீடியோ கேமில் பயன்படுத்தப்படும் ஸ்டான்லி கேம்ப் கோடாரியை ஆன்லைன் மூலம் அவர் வாங்கியுள்ளார். இதை தனது முதுகு பகுதியில் மறைத்துக் வைத்திருந்துள்ளார். இவர் ஆயுதம் வைத்திருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமல் இரு ந்தள்ளது.

வீடியோ கேமில் வருவது போல் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை எரித்துள்ளார். குடும்பத்தார் மீது இருந்த கோபம், வெறுப்பு காரணமாக அவர் இந்த கொலைகளை செய்துள்ளார்’’ என்றனர்.

போலீசார் மேலும் கூறுகையில், ‘‘அவர் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்பியுள்ளனர். ஆனால் ராஜாவுக்கு வரலாற்றில் அதிக ஈடுபாடு இருந்துள்ளது. மருத்துவ கல்விக்காக உ க்ரைன் சென்றார். ஆனால், கல்வியில் அவரால் கால் ஊன்ற முடியாமல் தோல்வியுடன் திரும்பினார்.
தனிமையை அதிகம் விரும்பிய அவர் ஆக்ரோஷமான வீடியோ கேம்களில் நாட்டம் கொண்டார். தனிமை வாழ்க்கை வாழ்வதற்காக பெற்றோரையும், தங்கை மற்றும் பார்வையில்லாத அத்தையையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

முதலில் உணவில் விஷம் கலந்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதில் அவர்கள் தப்பிவிட்டனர். புட் பாய்சன் என்ற கணக்கில் இதில் இருந்து தப்பினார். இந்த 4 பேரையும் பின்னர் கோடாரியயை பயன்படுத்தி கொலை செய்த ராஜா தூக்க மாத்திரைகளை அதிக அளவில் உண்டு தற்கொலைக்கு முயன்றார்’’ என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.