சென்னை: சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புபடுத்தி முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி பேசிய பேச்​சின் முழு வீடியோ தொகுப்பை தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தார். இதையடுத்​து, இந்த வழக்கு விசா​ரணையை உயர் நீதி​மன்​றம் தள்ளி வைத்​துள்​ளது.

சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புபடுத்தி முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி ஒரு விழா​வில் பேசிய பேச்சு சர்ச்​சைக்கு உள்​ளானது. இதனால் பொன்​முடி பதவியை இழந்​தார். மேலும், பொன்​முடிக்கு எதி​ராக 140-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் போலீ​ஸில் அளிக்​கப்​பட்​டன. அத்​துடன் உயர் நீதி​மன்ற நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷும், பொன்​முடிக்கு எதி​ராக தாமாக முன்​வந்து வழக்கை விசா​ரணைக்கு எடுத்​தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு  கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், “பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படி, புகார்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால் புகாரை காவல்துறையினர் முடித்து வைக்கலாம் . இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம். இந்த வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சருக்கு எதிரான நூற்றுக்கும் மேற்பட்ட புகார்களையும் முடித்து வைக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து புகார்தாரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தலைமை வழக்கறிஞர், “புகார்தாரர் களிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் புகார்கள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன” என்று விளக்கம் அளித்தார்.

அதற்கு நீதிபதி, “புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யட்டும்.  இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கட்டும்” என்றார். தொடர்ந்து நீதிபதி, “இதுபோல பேசும் நபர்களின் வாயை கட்டுப்படுத்த இந்த நீதிமன்றம் விரும்புகிறது.

மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்களின் இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும்.

ஒருவர் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடு அனைத்து குடிமக்களுக்குமானது. சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமானது அல்ல. ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா, இல்லையா? என்பது குறித்து விசாரிப்பது தான். அதன்பிறகு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும் என்றார்.

வேண்டாதவர்களுக்கு எதிராக புகார் வந்தால் அதில் முகாந்திரம் உள்ளதாக கூறும் நிலையில், ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது.

மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதி, “பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தீவிரமாக கருதப்படும்” என்றும் குறிப்பிட்டார். இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஆகஸ்டு 4ந்தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்கள் முடித்து வைக்கப்பட்டு புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். உடனே நீதிபதி, ‘புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து புகார்தாரர்களிடம் ஒப்புகை பெறப்பட்டதா?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், புகார்தாரர்கள் அனைவரிடமும் ஒப்புகை பெறப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து நீதிபதி, அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதையடுத்து, அன்றைய தினம் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு வழக்கை முடித்து வைப்பதாக கூறி ஆவணங்களை தாக்கல் செய்தது.

இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி,  சைவம், வைணவம் மற்​றும் பெண்​களை தொடர்​புபடுத்தி பொன்​முடி பேசிய முழு வீடியோ தொகுப்​பை​யும், அவர் மேற்​கோள் காட்டி பேசி​ய​தாக கூறப்​படும் 1972-ம் ஆண்​டுக்​கான ஆதா​ரத்​தை​யும் அரசுத்தரப்​பில் தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டு, விசா​ரணையை தள்ளி வைத்​திருந்​தார்.

இந்த​நிலை​யில் இந்த வழக்கு தற்போத  நீதிபதி என்​.சதீஷ்கு​மார் முன்​னிலை​யில் செப்டம்பர் 3ந்தேதி   மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் ஆஜராகி, பொன்​முடி பேசிய பேச்​சின் முழு வீடியோ தொகுப்​பை​யும், அவர் மேற்​கோள் காட்டி பேசி​ய​தாக கூறப்​படும் 1972-ம் ஆண்​டுக்​கான ஆதா​ரத்​தை​யும் தாக்​கல் செய்​தார்.

அதையடுத்து நீதிப​தி, இந்த ஆவணங்​களை பார்த்​து​விட்டு வழக்கை வி​சா​ரிக்க விரும்​புவ​தாகக் கூறி, வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​துள்​ளார்​.