சென்னை: உச்சநீதி மன்ற தீர்ப்பால் மாநில பல்கலைக்கழக வேந்தராகி உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்  இன்று   துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பான 10 மசோதாக்கள் அமலுக்கு வந்துள்ளன. அதனப்டி,  பல்கலைழக்க வேந்தராக இதுவரை இருந்து வந்த கவர்னர் நீக்கப்பட்டு மாநில முதலமைச்சர் வேந்தரானார்.

இதன் தொடர்ச்சியாக  இன்று (ஏப்.16ந்தேதி)  அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெறும் என  தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி இன்று (ஏப்.16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று மாலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 10 துணை வேந்தர்கள், 22 பதிவாளர்கள் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் உயர் கல்வியை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார். வரலாற்றிலேயே முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் பதிவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறை: 16ந்தேதி வேந்தர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம்.

 

[youtube-feed feed=1]