ஆமதாபாத்: 

காணாமல் போன வி.ஹெச்.பி. செயல் தலைவர் பிரவீன் தொகாடியா மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

தொகாடியா

வி.ஹெச்.பி.  அமைப்பின் தலைவர்   பிரவீன் தொகாடியா மீது 1996ல் ராஜஸ்தானில் கங்காபூர் காவல் நிலையத்தில்  ஒரு கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இந்த வழக்கில் சமீபத்தில்  ராஜஸ்தான் கங்காபுர் நீதிமன்றம் தொகாடியா மீது பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

இதையடுத்த ராஜஸ்தான் காவல்துறையினர், தொகாடியாவை கைது செய்ய குஜராத் வந்தனர். அவர்கள் குஜராத் காவல்துறை உதவியை நாடினர். இந்தத்  தகவல் அறிந்து தொகாடியா தலைமறைவு ஆகிவிட்டார்.

இது குறித்து அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் ஜே.கே.பாத்., “ராஜஸ்தான் காவல்துறையினர் எங்களது உதவியை நாடியவுடன், தொகாடியாவை பிடிக்க முற்பட்டோம். அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. அலுவலகத்திலும் இல்லை.

இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள அவர், எந்தவித பாதுகாப்பும் இன்றி நேற்று காலை 10.45 மணிக்கு தனது அலுவலகத்தில் இருந்து ஆட்டோவில் தப்பிச்சென்றதாக தெரியவந்தது” என்று தெரிவித்தார்.

மயங்கிய நிலையில்..

இதற்கிடையே, தொகாடியாவை காவல்துறையினர் கைது செய்துவிட்டதாகக்  கூறி, வி.ஹெச்.பி.  தொண்டர்கள் சோலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

ஆனால் காவல்துறை தரப்பில் தொகாடியாவை கைது செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதே நேரம் அவரைத் தேடும் பணியும் தொடர்ந்தது.

தொகாடியா நேற்று காலை 10.30 மணியளவில் வி.ஹெச்.பி., அலுவலகத்திலிருந்து ஆட்டோவில் சென்றதாக காவல்துறைக்குத் தெரியவந்தது. நான்கு தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தொகாடியா நினைவற்ற நிலையி்ல் காவல்துறையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் தற்போது ஆமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.