டில்லி:

லகம் முழுவதும் பரவி உள்ள விசுவ இந்து பரிஷத் அமைப்புக்கு தலைவராக பிரவீன் தொகாடியா இருந்து வருகிறார்.

இந்நிலையில், தலைவர் பதவி மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 52 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்துத்துவா பிரதிநிதி களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசுவ இந்து பரிஷன் அமைப்பின்  மூத்த தலைவர்கள் ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் வி.ஹெச்.பி. அமைப்பிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்வுசெய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி நாளை மறுதினம் (14ந்தேதி)  அரியானவின் குர்கானில் தேர்தல் நடத்துவது என  முடிவு செய்யப் பட்டதாகவும், தற்போது அதற்கான பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த  52 ஆண்டுகளாக  விசுவ இந்து பரிஷத் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனமே செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தலைவர்  மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தற்போதைய விஎச்பி சர்வதேச செயல் தலைவர் பதவிக்கு   ராகவ் ரெட்டி, விஷ்ணு சதாஷிவ்கோக்ஜி  ஆகியோர்  போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

விஷ்ணு சதாஷிவ்கோக்ஜி  ஏற்கனவே இமாச்சல பிரதேச கவர்னராக இருந்தவர்.  இந்த தகவலை விஎச்பி அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் உறுதிப்படுத்தி உள்ளார்.

சமீபகாலமாக மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக பிரவின் தொகாடியா கருத்து தெரிவித்து வருவதைர தொடர்ந்து, அவரை மாற்றும் முயற்சியாக தேர்தல் நடைபெறுவதாக தகவல்கள் பரவி வருகிறது.