நெல்லை:

ராம ராஜய் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு நெல்லையில் 23ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கியது. 5 மாநிலங்கள் வழியாக நாளை தமிழகம் வருகிறது.நெல்லை மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் வழியாக நாளை ராஜபாளையம் சென்றடைகிறது. தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பாக வரவேற்பபு அளிக்கப்படுகிறது.
பின்னர் நாளை இரவு மதுரை சென்றடைகிறது.

இதையொட்டி இன்று மாலை 6 மணி முதல் 23ம் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என போலீஸ் எஸ்.பி. அருண்சக்திகுமார் தெரிவித்துள்ளார். யாத்திரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.