புர்கா அணிந்து பெண்களிடம் சில்மிஷம் செய்த விஷ்வ இந்து பரிஷத் தலைவருக்கு தர்ம அடி

Must read

இஸ்லாமிய பெண்கள் போல புர்கா அணிந்து கொண்டு பெண்களிடம் சில்மிஷம் செய்த அலகாபாத்தை சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவருக்கு மக்கள் தர்ம அடி போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.

abivhp

அலகாபாத் அருகேயுள்ள உமர்ப்பூர் என்ற ஊரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பஞ்சாய்த்து தலைவர் ஷிப்ரா யாதவ் என்பவரின் கணவர் அபிஷேக் யாதவ், இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் அப்பகுதியின் பிரபலமான தலைவராக இருக்கிறார்.
அவர் முஸ்லீம்கள் கொண்டாடிய ஒரு விழாவில் புர்கா அணிந்து கலந்து கொண்டு அங்கு வந்த பெண்களிடம் சில்மிஷம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது, அங்கிருந்த மக்கள் அவரை செமத்தியாக உதைத்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறை அவர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆனால் இதை மறுக்கும் அபிஷேக்கின் குடும்பத்தினர் அவர் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களிடம் சிக்கி அவர்களால் தாக்கப்பட்டதாக கூறி வருகின்றனர்.

More articles

Latest article