சென்னை:
இந்து தீவிரவாத பேச்சு தொடர்பாக நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஹெச்பி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஹெச்பி சென்னை மாநகர தலைவர் ரவி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில், ‘‘நடிகர் கமல் சுய லாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும், அவர் நடத்தி வரும் டுவிட்டர் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இந்துக்களை தீவிரவாதியாக மக்கள் எண்ண வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமயத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கமல் மீது உ.பி. மாநிலத்தில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]