சென்னை,
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டுவெற்றிவேல் எம்எல்ஏ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
அதையடுத்து, உடடினயாக அப்பீல் மனு தாக்கல் செய்தார். மேலும், அப்பீல் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி தலைமை நீதிபதியியிடம் முறையிட்டதை தொடர்ந்து, அவரது அப்பீல் மனு இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை நடைபெற இருக்கும் அதிமுக செயற்குழு, பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கடந்த 8 ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்ட கட்சி விதிப்படி பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே அதிமுகவின் ஒன்றிணைந்த அணிகள் கூட்டும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி கார்த்திகேயன், பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவதை விட, தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதே சிறந்தது என்றும், நீதிமன்ற நேரத்தை வீணடித்த தற்காக எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக கூறினார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எம்எல்ஏ வெற்றிவேல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.