கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 67-வது தேசிய திரைப்பட விருதுகளில் வெற்றிமாறனின் அசுரன் படம் இரண்டு விருதுகளைப் பெற்று கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், நடிகர் விஜய்யுடன் தான் இணைவதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

வெற்றிமாறன், விஜய்யை இயக்கும் வாய்ப்பை தனது முன்கூட்டிய ஒப்பந்தங்கள் காரணமாக இழந்தார். அதனால் இப்போது தனது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, விஜய்க்காக காத்திருக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்த மாஸ் கூட்டணிக்காக ரசிகர்கள் பெரிதும் உற்சாகமடைகிறார்கள்.

 

[youtube-feed feed=1]