சென்னை:

மிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்புக்கு ஏற்கனவே அறிவித்தபடி  இன்றுமுதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இன்று காலை 10 மணி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

கால்நடை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் பிவிஎஸ்சி எனப்படும் கால்நடை மருத்துவப்படிப்புக்கு 460 இடங்கள் உள்ளன.  இதற்கான கால்நடை மருத்துவக்கல்லூரிகள்  சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் உள்ளது.

இங்கு கால்நடை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ மாணவிகள்  இன்று முதல் விண்ணப்பங்கள் செய்யலாம்.

விண்ணப்பம் இன்றுமுதல் (மே 8ம் தேதி) முதல் ஜுன் 10ம் தேதி மாலை 5.45 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் படிப்புகள் குறித்த தகவல் குறிப்பேடு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in ஆகிய பல்கலைக்கழக இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் தகுந்த சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,  தகுந்த சான்றிதழ்களுடன் ஒவ்வொரு பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பத்தையும் தனித்தனியாக கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தலைவர்,

சேர்க்கைக் குழு (இளநிலைப் பட்டப்படிப்பு),

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,

மாதவரம் பால்பண்ணை, சென்னை600 051

என்ற முகவரிக்கு வரும் ஜுன் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் ஜூன் 24ம் தேதி வெளியிடப்படும்.

இந்தப் படிப்புக்களுக்கான கலந்தாய்வு ஜூலை 9 ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜூலை 9- ஆம் தேதி பிவி.எஸ்ஸி ஏஎச் (சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்பிரிவு), பி.டெக் (சிறப்பு பிரிவு) கலந்தாய்வும்,

ஜூலை 10 ஆம் தேதி பிவி.எஸ்ஸி- ஏஎச் (கலையியல் பிரிவு) படிப்புகளுக்கு கலந்தாய்வும்,

உணவு, பால்வளம், கோழியின தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஜூலை 11 ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளில் 360 இடங்களுக்கும், உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு 40, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 40 இடங்களுக்கும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்பிடிப்பில் 20 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இந்தத் தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.