சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை (23ந்தேதி) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கவுன்சிலிங் சென்னையில்  நடைபெற உள்ளது. பொதுப்பிரிவுக்கான கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கட்டுப்பாட்டில், நான்கு அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. மேலும் பல தனியார் கல்லூரிகளும் உள்ளன.  இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்) ஆகியவை உள்ளன.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

பி.டெக் படிப்புகளுக்கு மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிதாக சேலம் தலைவாசல், தேனி வீராபாண்டி, உடுமைப்பேட்டையில் தலா 40 இடங்களுடன் மூன்று கல்லூரிகள் செயல்பட தொடங்குகின்றன. அப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையானது பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பம்விநியோகம் ஏற்கனவே நடைபெற்று முடிந்ததுள்ளன.

இந்த படிப்புகளில், 2020 – 21ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில், 13 ஆயிரத்து, 901 பேர் இடம் பெற்றுள்ளனர்

முதல்கட்டகமாக நாளை (23ந்தேதி) , மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் என, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, சென்னை வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாளை நடைபெறுகிறது.

பொதுப்பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங், www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற, பல்கலையின் இணையதளங்களில், ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.

தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், 24ம் தேதி காலை, 10:00 முதல், 28ம் தேதி மாலை, 6:00 மணி வரை பல்கலையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை, 30ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த ஆணையை பதிவிறக்கம் செய்து, ஜனவரி, 13 மாலை, 5:00 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கான பதிவு, ஜனவரி 19ந்தேதி தொடங்கும்.

கவுன்சிலிங் தொடர்பான விபரங்களுக்கு, பல்கலையின் இணையதளத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.