சென்னை: பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். மறைந்த பிரபல இயக்குனர் கே.பாலசந்தரால் அவள் ஒரு தொடர்கதை படத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டவர்.

திரைப்பட நடிகர் ராஜேஷ் வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அவருக்கு வீசிங் எனப்படும் மூச்சுச்திணறல் நோய் இருந்து வந்தது. அதற்காக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், இன்ற அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர், அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
நடிகர் ராஜேஷ் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளளார். திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். மேலும் 150க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் கதாநாயகனாக நடித்து வந்த ராஜேஜ், பின்னர், முக்கிய கதாபாத்திரம், குணச்சித்திர நடிகர், வில்லன் ரோல் என பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
மறைந்த பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தரால் திரையுலக்கு அறிமுகப்படுத்தபவர் ராஜேஸ். இவர் பாலச்சந்தர் 1974 ஆம் ஆண்டு இயக்ககிய அவர் “அவள் ஒரு தொடர் கதை” என்ற படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குள் நுழைந்தார். , ஆனால் அதில் ஒரு சிறிய வேடத்தில் மட்டுமே நடித்தார்.
ராஜேஸ் நாயகனாக அவரது முதல் படம் “கன்னி பருவத்திலே” (1979), இது ராஜ்கண்ணு தயாரித்தது. பின்னர், ராஜேஷ் கே. பாலச்சந்தர் இயக்கிய “அச்சமில்லை அச்சமில்லை” படத்தில் நடித்தார். பின்னர், அவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார், மேலும் கமல்ஹாசனுடன் “சத்யா”, “மகாநதி” மற்றும் “விருமாண்டி” போன்ற படங்களில் நடித்தார்.
இப்போது அவர் ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார், மேலும் அவர் நகரத்தில் ஒரு முன்னணி கட்டிடக் கலைஞர் ஆவார். அவர் ஹாலிவுட் நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதினார். அவர் ஒரு கிறிஸ்தவர், பின்னர் அவர் பெரியாரின் சித்தாந்தங்களில் தீவிரமாக இருந்தார், பின்னர் அவர் ஜோதிடத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் ஜோதிடம் பற்றி பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.