லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் உடல்நிலை கடந்த ஒரு வாரமாக கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூத்த அரசியல்வாதியும், உ.பி. மாநில முதல்வருமான 82வயது முலாயம்சிங் யாதவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இருந்தாலும், அஅவரது உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது. இந்த நிலையில், இன்று காலை அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.
முலாயம்சிங் யாதவ், 1992-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியை தொடங்கினார். 1993-ல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கை கோர்த்தார். இருவரும் சேர்ந்து உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டினர். ஆனால் இரு கட்சிகளில் இடையே அதிகாரப்போர் ஏற்பட்டதால், கூட்டணி உடைந்தது. பின்னாளில் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டது. அதைத்தொடர்ந்து அங்கு கடந்த இரு முறையாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முலாயம் சிங், உ.பி. மாநிலத்தின் முதல்வராக 3 முறையும், நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.